Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிர்ஷ்ட கற்களின் தரத்தை அறிந்துக்கொள்வது எப்படி தெரியுமா....?

Advertiesment
அதிர்ஷ்ட கற்களின் தரத்தை அறிந்துக்கொள்வது எப்படி தெரியுமா....?
ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தையும் மேன்மேலும் பெருகச் செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும்.


நவரத்தினங்களில் தங்கள் பிறந்த எண்ணுக்கேற்ற  அதிர்ஷ்டக் கல்லை வாங்கி, தங்கள் உடலில் படிம்படி அணிந்துகொண்டால், அந்தக் கற்களின் ஆற்றல் உடலில் பாய்ந்து, உடல் நலக் குறைபாடுகளைப்  போக்குவதோடன்றி, அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித் தருகிறது. 
 
முத்து : நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
 
மரகதம் : கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
 
பச்சைக்கல் : குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
 
வைரம் : சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
 
பவளம் : உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
 
கோமேதகம் : பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
 
புஷ்ப ராகம்: சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
 
வைடூரியம்: பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
 
நீலக்கல்: பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ஏழுமலையான் சிலை பற்றிய சில முக்கிய தகவல்கள்...!!