Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்

Advertiesment
டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்
, புதன், 30 நவம்பர் 2016 (19:56 IST)
அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாத நீங்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள். குருபகவான் 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் தோன்றும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். எதிர்ப்புகள் குறையும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் வந்தமையும். உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் பகவானும் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியிலும் மதிப்புக் கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதரங்கள் உங்களுடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் 7-ல் சனி தொடர்வதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, முன்கோபம் வந்துச் செல்லும்.

மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மூட்டு, இடுப்பு மற்றும் தலை வலி வந்துப் போகும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்கள் ராசிநாதனான சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புதிதாக வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். சொந்த-பந்தங்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். என்றாலும் உத்யோகஸ்தானாத்தில் கேது தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். கலைத்துறையினரே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - மேஷம்