அதர்மத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் நீங்கள் அகிம்சை வழியில் செல்பவர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இருப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள்.
உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணத் தடைகள் விலகும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அவர்கள் உங்களின் புதுத் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சுபச் செலவுகளும் அதிகமாகும். விலை உயர்ந்த ஆபரணங்களும் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது, கூடுதலாக ஒரு தளம் அமைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவிர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.
ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்வதால் சின்ன சின்ன விபத்துகள், இரத்ததில் ஹீமோகுளோபின் குறைப்பாடு, முன்கோபம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல், உடல் உஷ்ணத்தால் கட்டிகளெல்லாம் வந்துப் போகும். நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் சரியில்லாததால் ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். முக்கிய வேலைகளை வேலையாட்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையேயென அவ்வப்போது புலம்புவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். தன் பலம் பலவீனத்தை உணரும் மாதமிது.