Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - தனுசு

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - தனுசு
, புதன், 30 நவம்பர் 2016 (21:07 IST)
தடைகள் பல வந்தாலும் தயங்காமல் எடுத்த வேலையை முடித்துக் காட்டும் நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள். கேது 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

ஆன்மிக அறிஞர்களின் நட்பு கிடைக்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்திலும் மதிப்பு, மரியாதைக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் தோற்றப் பொலிவுக் கூடும். கவர்ச்சிகரமாகப் பேசி எல்லோரையும் ஈர்ப்பீர்கள்.

உறவினர், நண்பர்களும் தேடி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நகைகளை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் சாதிக்கும் வல்லமை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். இந்த மாதம் முழுக்க உங்களின் பாக்யாதிபதியான சூரியன் சாதகமாக இல்லாததால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தந்தையாருக்கு உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராசிநாதன் குரு 10-ல் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தை கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். புது முதலீடுகள் பற்றி யோசிப்பீர்கள். உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். எதிர்பார்த்தவைகளில் ஒரு சில நிறைவேறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - விருச்சிகம்