தடைகளை நீக்கி அற்புத பலன்களை தரும் சதுர்த்தி விரதம் !!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (09:22 IST)
விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரிக்கலாம்.


சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்று சுக்ர வாரம் சங்கடஹர சதுர்த்தி ஆகவே, இன்றைய தினம், சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லலாம்.

சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும்.

வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அங்காரக சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் கடன் பிரச்சினை தீரும்.

திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதம் இருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும்.

ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள்.

குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும். புதன் கிழமை மற்றும் மார்கழி மாத புதன் கிழமையன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நல்ல புத்திசாலி ஆக மாற்றி விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்