Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்!

Advertiesment
Monthly astro

Prasanth Karthick

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:10 IST)
கிரகநிலை:
பஞசம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-08-2024 அன்று புதன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
துலா ராசியினரே, இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் உண் டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.  தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக் கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக் கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்   மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதக மான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப் படும் பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

சித்திரை:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

ஸ்வாதி:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

விசாகம்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி!