Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் ஜாதகம்

Advertiesment
தமிழக சட்டமன்ற தேர்தல் ஜாதகம்
, திங்கள், 11 ஏப்ரல் 2011 (16:25 IST)
WD


webdunia
WD


தமிழக சட்டமன்றத் தேர்தல் புதன்கிழமை 13.4.2011 காலை 8 மணிக்கு சந்திரன் ஹோரையில் எமகண்டத்தில் வாக்குப் பதிவு தொடங்குகிறது. புதன்கிழமை புதன் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதன் நேரடியாக வலுவடையாமல் மறைமுகமாக நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும். வெற்றித் தோல்விக்குரிய வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்.

14.4.2011 அன்று பிறக்கும் கர வருடம் மிதுன லக்னத்தில் பிறப்பதாலும் கர வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதாலும், வாக்குப்பதிவு தொடங்கும் லக்னம் சுக்ரனின் லக்னமான ரிஷப லக்னமாக வருவதாலும் லக்னாதிபதி சுக்ரன் 10ஆம் இடத்தில் அமர்ந்து கேந்திராதிபத்ய தோஷம் அடைவதாலும் தமிழக சட்டசபை கடைசி கூட்டம் கடந்த 10.2.2011 அன்று பரணி நட்சத்திரத்தில் நடைபெற்றதாலும் தேர்தல் நாளன்று சந்திரன் ஆட்சிப் பெற்று அமர்வதாலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

ஆனால் திமுக கட்சியின் ஜாதகமும் திமுக தலைவரின் ராசிக்கு தற்கால கோச்சார கிரகமும் தேர்தல் நாளன்று வலுவாக உள்ளது. எனவே ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும். வாக்குப் பதிவு லக்னம் சுக்ரனாக வருவதாலும், சுக்ரனே ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக வருவதாலும் கூட்டணி தர்மத்தையும் தாண்டி உள்பகையால் தோற்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி மாறும். தனிப்பெரும் கட்சி அருதி‌ப்பெரும்பான்மை பெறுவது கடினம்.

சனிபகவான், குரு, சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகிய ஐந்து கிரகங்களும் ஐந்து கிரகங்களையும் பார்ப்பதாலும் ஏழாம் வீட்டையும் சனிப் பார்ப்பதாலும் கூட்டணி ஆட்சி அமையும். தேசிய கட்சிகள் (காங்கிரஸ், பா.ஜ.க) மற்றும் சாதிக்கட்சிகள் வலுவிழக்கும். தேர்தல் நாளும், ஓட்டு எண்ணிக்கை நாளும் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும். தபால் வாக்குகள் அதிமுகவிற்கு சாதகமாகும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தற்சமயம் புதன் தசை நடைபெறுவதாலும் புதனின் ஆதிக்கத்தில் தேர்தல் நாளும், எண்ணப்படும் நாளும் வருவதாலும் அவரின் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் மூலமாக அதிமுக கூட்டணி வலுவடையும் புதிய வாக்காளர்களுக்கு உரிய கிரகமாக புதன் வருவதாலும் புதன் அதிமுக தலைமைக்கு சாதகமாக இருப்பதால் புதிய வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு 80% வரை கிடைக்கும்.

கன்னி ராசிக்காரரான வை.கோ புதனின் ராசியில் பிறந்தவர். அவர் அதிமுக கூட்டணியில் இல்லாததால் அதிமுக கூட்டணிக்கு புதனின் பாசிடிவ் கதிர்வீச்சு குறைகிறது. இதனால் அதிமுக அதிக இடங்களை பெற முடியாது. ஆனால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

மிருகசீரிடபம் நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்த திமுக தலைவருக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5ஆம் வீட்டில் தற்சமயம் சனி அமர்ந்திருப்பதால் அவர் தனது பூர்வீக தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவதால் அவருக்கும், அவரது மைந்தனுக்கும் வெற்றித் திணறி வரும். அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்த அதிமுக தலைவிக்கு தற்சமயம் ராகு தசையும், ஏழரைச்சனியும் நடைபெறுவதால் ராகு மீது படுத்து சனிபகவானின் செய்கையான சயனக் கோலத்தில் உள்ள ஸ்ரீரங்கப் பெருமானின் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதால் அவருக்கும் அவரது கட்சிக்கும் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.

சின்னங்கள்:

திமுக
உதயசூரியன்
உதயம் = சுக்ரன்
சூரியன் = சூரியன்

அதிமுக
இரட்டை இலை
இரட்டை = சந்திரன்
இலை = சந்திரன்

பா.ம.க
மாம்பழம்
மா = சனி
பழம் = செவ்வாய்

தே.மு.தி.க
முரசு
சனி+செவ்வாய்

சி.பி.எம்
அரிவாள் = செவ்வாய்
சுத்தி = சனி

சி.பி.ஐ
அரிவாள் = செவ்வாய்
கதிர்=சுக்ரன்

வி.சி
மனித நேயம் மக்கள் கட்சி
எரியும் மெழுகுவர்த்தி
மெழுகு = சனி
எரியும் வர்த்தி = செவ்வாய்

மேற்கண்டவாறு கட்சி சின்னங்களை கிரகங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போதும் அதிமுக கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது.

எண் ஜோதிடப்படி தேர்தல் நாளின் பிறவி எண் நான்காக வருவதாலும் வாக்கு எண்ணிக்கை நாள் 13.5.2011 அன்று பிறவி எண்ணும், விதி எண்ணும் நான்காக வருவதாலும் 4ஆம் எண்ணுக்குரிய கிரகமான ராகு அதன் பகைக் கோளான கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும் கிராமங்கள் திமுகவிற்கு பெரிய பலத்தை தரும். ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. முதலமைச்சர் பதவியில் அமர்பவருக்கு நோய், விபத்து, வழக்குகளையும் சந்திக்க நேரிடும். ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இடையில் அணிகள் மாறி ஆட்சி மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணி 130 முதல் 145 வரை

திமுக கூட்டணி 70 முதல் 90 வரை

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil