Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

Advertiesment
சனிப் பெயர்ச்சி
எந்தச் செயலையும் திறம்பட செய்யும் நீங்கள், மற்றவர்களால் செய்ய முடியாத வேலையையும் துணிச்சலுடன் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.

இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்த, அழ வைத்த சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய 9வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார்.

தண்ணீருக்குள் அழுகின்ற மீன் தரையிலிருப்பவர்களுக்கு தெரியாததைப் போல உள்ளுக்குள் புழுங்கி தவித்த உங்களை உணராமல் சுற்றியிருப்பவர்களெல்லாம் பலவாறு தொந்தரவு கொடுத்தார்களே! உங்களைப் பார்த்தாலே எழுந்து நின்று கை கட்டி மரியாதை செய்தவர்களெல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனதே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள்.

பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளில் இருந்து மீள்வீர்கள். கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.

வீடு, மனை வாங்கவேண்டுமென எவ்வளவு காலமாக கனவு கண்டீர்களே! இப்பொழுது நிறைவேறும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றி உண்டு. முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வழக்கு சாதகமாக முடியும். வேற்று மதத்தினர், நாட்டினர் உதவுவர். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். வாகனம் வந்து சேரும். வீடு சுப நிகழ்ச்சிகளால் களைக்கட்டும். மனைவிக்கு பிடித்தமான உயர்ரக ரத்தினங்கள், ஆடைகள் வாங்கித் தருவீர்கள்.

உங்களின் சுக, லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பெரிய பதவிகள் தேடி வரும். புது வீட்டில் குடியேறுவீர்கள்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சிறுசிறு விபத்துகள், மனஉளைச்சல்கள், மனைவி வழியில் செலவினங்களும், உடல் நலத் தொந்தரவுகளும் வந்து செல்லும்.

பாதைத் தவறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்கள் ஆலோசனையை ஏற்று நல்வழிக்கு திரும்புவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வர்.

வியாபாரத்தில் தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். உணவு, மருந்து, ஸ்டேஸ்னரி வகைகளால் ஆதாயம் உண்டு. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்களே! இந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் தகுதி உயரும்.

கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவ, மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமாவீர்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி அஸ்திவாரமாய் அழுந்திக் கிடந்த உங்களை கோபுரமாய் மிளிர வைப்பதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil