Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

Advertiesment
சனிப் பெயர்ச்சி
நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் அதற்கேற்ற புத்தி சாதுர்யம் உடையவர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களை தந்த சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார்.

உங்களின் பிரபலயோகாதிபதியான சனிபகவான் பாதக ஸ்தானமான 11ஆம் வீட்டை விட்டு விலகி வருவது நல்லதுதான். 12ஆம் வீடான விரைய வீட்டில் இப்போது நுழைந்தாலும் அது நட்பு வீடாக அமைவதால் உங்களுக்கு நல்லதையே செய்வார்.

ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனி, உங்களிடமிருந்த மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எடுத்த எடுப்பிலேயே பறித்துக் கொண்டாரே! பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டதை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று மனசுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தீர்களே!

இப்பொழுது விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும்.

தண்ணீரும் தாமரை இலையுமாக இருந்த கணவன்-மனைவிக்குள் இனி ஒற்றுமை பலப்படும். சனிபகவான் 6ஆம் வீட்டை பார்ப்பதால் வாங்கிய கடனை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும்.

உங்களின் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகாவன் செல்வதால் சொத்துச் சேர்க்கையுண்டு. சகோதரர் உதவுவர்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். மீண்டும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் உத்யோகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள்,வீண்பழி,உறவினர் இழப்பு வரக்கூடும்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து வருந்தினீர்களே! இனி அவர்களின் வாழ்விற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதுடன் திருமணமும் கூடி வரும். சனி 9&ம் வீட்டைபார்ப்பதால் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. உறவினர்கள்& பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது யாரைப் பற்றியும் விமர்சித்துப் பேச வேண்டாம்.

வியாபாரத்தில் அவசரபட்டு பெரிய முதலீடுகளை போட்டு அவதியில் சிக்கித் தவித்தீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர் தேடி வருவார்கள். எலக்ட்ரானிக்ஸ், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி&இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு.

உத்யோகத்தில் கடினமாக உழைத்தும் ஓர் அங்கீகாரமில்லாமல் போனதே! இனி பதவி உயரும். வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். மற்றவர்களின் உள்விவகாரங்களில் அத்துமீறி நுழைய வேண்டாம்.

கன்னிப்பெண்களே! காதலைத் தள்ளிப் போடுங்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். கனவுத்தொல்லை,தூக்கமின்மை வந்துபோகும். மாணவ&மாணவியர்களே! உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil