Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்...!

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்...!
ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செயல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக்
காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
 
நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி.  உன்னைடைய சுகத்துக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
 
எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது  சொர்க்கமாக மாறிவிடும்.
 
இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.
 
இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய  முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.
 
மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான். வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
 
மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ  கேள்விப்பட்டிருக்கிறாயா?
 
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக  வேண்டும்.
 
நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச்  சிரிப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐப்பசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் கந்த சஷ்டி விரதம்....!