Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகவான் ரமணரின் ஆன்மிக சிந்தனை துளிகள்....!

Webdunia
மூச்சின் ஓட்டத்தை மனதால் உற்று நோக்கினால், அதுவே மனதின் கட்டுப்பாடாம். அவ்வாறு நிலைத்த கண்காணிப்பு மூச்சை உறுதிப்படுத்தும்.
மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவை போல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி. மூச்சு காற்றும்,  மனமும் ஒரே சக்தியின் இரு கிளைகள்.
 
மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
 
கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும். தீமைகளைச் செய்யாதீர்கள்.  புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
 
மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும். குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்  நிலையும் உண்டு.
 
தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
 
உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும்.  ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
 
மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே  தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகுண்ட ஏகாதசி 2024! ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பின் சிறப்புகள்! | Vaikunda Ekadasi 2024

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(24.12.2024)!

சிவன் ஆலயங்களில் நவக்கிரகங்களின் திசைகள் எப்படி இருக்கும்?

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை! - பேரூர் மற்றும் சிரவை ஆதினங்கள் தொடங்கி வைத்தனர்!

இந்த ராசிக்காரர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம்a!– இன்றைய ராசி பலன்கள்(23.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments