Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள்...!

Advertiesment
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள்...!
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள்  வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும் எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.
 
பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.
 
சூரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம்.
 
சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல் செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள்  என்பது இதன் பொருள்.
 
தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்.
 
பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய  வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.
 
இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சகலவித எதிர்மறை சக்திகளை விலக செய்யும் எருக்கம்பூ...!