டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை பவுர்ணமி தினமாகும். அந்த தினத்தில் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி புதன்கிழமை 30-ந் தேதி நள்ளிரவு 3.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) நள்ளிரவு 1.49 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் அன்றைய தினம் இரவு வருடப் பிறப்பும் உள்ளதால் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.