Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ மஹாலஷ்மியை வணக்கினால் கிடைக்கும் பலன்கள்

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (10:40 IST)
ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம்.அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.



இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.

1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .

கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து -இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் :

மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ

2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் :

பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா

3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது,
அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ -

அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.

மந்திரம் :

ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ

4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.

மந்திரம் :

பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ

5. கல்வியில் வல்லமை பெற . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.

மந்திரம் :

அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா

6. ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து
கொண்டே இருந்தால் . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

மந்திரம் :

கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது?

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – மீனம் | Meenam 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

அடுத்த கட்டுரையில்
Show comments