Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?...

Advertiesment
கடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?...
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம் அல்லவா?

 
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகா  விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான  ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர்.
 
அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும்  என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.
 
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக  கூறியுள்ளார்கள்.
 
ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த  பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.
 
இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும்  ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ராசிக்காரர்கள் இந்த வகை தானங்களை செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள்