Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்தர்களின் தலைமகன் அகத்தியர் பற்றிய அரிய தகவல்கள்

Advertiesment
சித்தர்களின் தலைமகன் அகத்தியர் பற்றிய அரிய தகவல்கள்
, செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (12:13 IST)
18 சித்தர்களில் முதன்மையான சித்தராக கருப்படும் அகத்தியர் பற்றிய அரிய தகவல்களை மிகச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.



பொதிகைமலையில் 18 சித்தர்களில் முதன்மையான சித்தராக கருதப்படும் அகத்தியர் இருப்பதாக நம்பப்படுகிறது.

18 சித்தர்களில் முதல் சித்தராக போற்றப்படுவர் அகத்தியர். இவர், வேத வித்துக்களாக சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அகத்தியருக்கு பல வேத மந்திரங்கள் இயற்றிய பெருமை உண்டு.

ஒரு முறை (நெல்லை மாவட்டம்) பொதிகைமலையில் குற்றாலத்தை அகத்தியர் அடைந்தார். அங்கு அவரை சுந்தரானந்தர், யூகிமுனி, கொங்கணவர் ஆகியோர் அன்புடன் மனம் மகிழ வரவேற்று சிறப்பித்தனர்.

அப்போது, அவர்கள் தங்களுக்கு, சிவன், பார்வதியின் திருமணத்தை காண வேண்டும் என்ற ஆசையை அகத்தியர் முன்பு வெப்படுத்தினர். இதைக் கேட்ட அகத்தியர் அனைவருக்கும் சிவ பெருமானின் திருமணத்தை காண செய்தார்.

சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன் செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் போற்றப்படுகிறார்.

இதனால்தான் பொதிகைமலை அகத்தியர் உருவத்தில் அமைந்துள்ளதாக ஆன்மீக அன்பர்கள் கூறுகிறார்கள்.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil