Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன வாஸ்து இந்தியாவிற்கு பொருந்துமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
சீன வாஸ்து இந்தியாவிற்கு பொருந்துமா?
, வியாழன், 3 ஜூலை 2008 (13:56 IST)
சீன வாஸ்து இந்தியாவில் பொருந்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

நமது நாட்டில் பாம்பை நாகக் கன்னி என்கிறோம். குரங்கை ஆஞ்சநேயர் என்கிறோம். நமது வழிபாட்டு முறையே தனியாக உள்ளது.

பொதுவாக வாஸ்து என்றால் நிலப்பரப்பைப் பொருத்து அமைவது. இயற்கையின் ஆற்றலை எந்தத் தடையும் இல்லாமல் நாம் பெறுவதற்கு வழிவகுப்பதுதான் வாஸ்து.

ஈசானியம், அதாவது வடகிழக்கு பகுதி திறந்த வெளியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். பூமியின் அடிப்படையில் பார்த்தால் வடகிழக்குப் பகுதி காந்தப்புலம். அதன் அடிப்படையில் வட முனையில் பளுவை வைத்தால் தெற்கு பகுதியில் பளுவை வைக்கக் கூடாது. அதுபோலவே தெற்கில் பளு வைத்தால் வடக்கில் வைக்கக்கூடாது.

எனவே இந்தியாவின் நில அமைப்பை வைத்துப் பார்க்கும் போது நமது வாஸ்து முறை தான் நமக்கு உகந்ததாக இருக்கும். சீன வாஸ்து நமக்கு ஏற்றதல்ல. மேலும் சீன வாஸ்துவைப் பயன்படுத்தினால் சிக்கல்கள்தான் ஏற்படும்.

வாஸ்து மீன் பற்றி கூறுங்கள்?

வாஸ்து மீன் என்றெல்லாம் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. வழக்கமாக அந்த காலத்தில் வீட்டின் முற்றத்தில் மீன் வளர்ப்பார்கள். அல்லது கிணற்றில் மீன் இருக்கும். இயற்கையிலேயே வீடுகளில் மீன் வளர்க்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த வாஸ்து மீன் (அரவானா) என்பது வியாபார நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது. அந்த மீன் பார்த்துக் கொண்டே இருந்தால் கெட்டது, குதித்தால் நல்லது, தென் கிழக்கு மூலையில் சமையல் அறை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் மீன் வளர்த்தால் அதனை சரி செய்து விடும் என்பதெல்லாம் அபத்தம்.

சாதாரணமாக மீன் வளர்ப்பது என்பது வீட்டிற்கு நல்ல விஷயம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்படும் வாஸ்து மீன் சில பல பலன்களைக் கொடுக்கும் என்பதில் எல்லாம் உண்மை இல்லை.

ஒட்டுமொத்த வீட்டின் வாஸ்துவையும் மாற்றும் சக்தி அந்த ஒரு மீனுக்கு இருக்கும் என்பதை நம்புவதற்கில்லை.

Share this Story:

Follow Webdunia tamil