2008 வருடத்தின ் பிறப்பின் அடிப்படையில் பார்க்கும் போது ஒரு ராசிக்கு ஒரு சிலது சிறப்பாக இருக்கும். ஒரு சில கஷ்டங்களும் இருக்கும். எல்லா ராசிக்கும் நல்லது கெட்டது என கலந்தே காணப்படுகிறது. இது அனைத்து ராசிகளுக்கும் பொருந்தும்.
மிதுன ராசிக்கு சூரியன் நல்ல இடத்தில் இருந்தாலும், ராகு கேது மாற்றம் தவறாக அமைந்துள்ளது.
கும்ப ராசிக்கு குரு இருப்பது சிறப்பாக இருக்கும். ஆனால் 7ல் சனி இருப்பதால் ஒரு சில சிக்கல்கள் ஏற்படும்.
இதுபோன்றுதான் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு விதத்தில் நல்லதும் கெட்டதும் கலந்தே உள்ளது.
webdunia photo
WD
பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் ஆண்டுப் பலனை கொடுக்கும்போது நல்ல பலன்களை கொடுப்போம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு கொடுக்க இயலாது. ஏனெனில் கஷ்டங்கள்தான் அதிகமாக இருக்கிறது. அதனால் கஷ்டங்களைத் தான் அதிகமாகக் கூற வேண்டியது இருக்கும். இந்த வருடத்தில் எந்த ராசிக்கும் சிறப்பாக இருக்கும் என்பதை கூற இயலாது.
2008 யாருக்கு மோசமாக இருக்கும்?
கடகம், மகர ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி மாற்றத்திற்கும் 2008க்கும் எந்த தொடர்பும் இல்லையா?
webdunia photo
WD
அப்படி சொல்ல இயலாது. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய இந்த வருடம் நமது ராசிக்கு எந்த இடத்தில் பிறக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
மேஷ ராசிக்கு 6ம் இடத்தில் இந்த வருடம் பிறக்கிறது. அதனால் கொஞ்சம் செலவு இருக்கும், அலைச்சலும் இருக்கும். ஆனால் முன்னேற்றமும் தரும்.
ரிஷபத்திற்கு 5 ம் இடத்தில் இந்த வருடம் பிறக்கிறது, அது நல்ல பலனைத் தரும்.
ரிஷபத்திற்கு 4ல் இருக்கும் சனி, 8ல் இருக்கும் குரு ஆகியவை கெடு பலனைக் கொடுத்தாலும், இந்த வருடம் 5ம் இடத்தில் பிறப்பதால் கூறப் புண்ணியஸ்தானம் என்பதால், சனி, குரு ஆகியவற்றின் கெடு பலன்கள் வருடப் பிறப்பின் நட்சத்திரத்தினால் குறைக்கப்படும். கெடு பலன்களின் தீவிரம் குறையும்.
இந்த வருடம் மோசமான நிலையில்தான் பிறக்கிறது. 2008ம் ஆண்டே ஏழரை சனியில் பிறக்கிறது, 2008ம் ஆண்டு கன்னி ராசியில் பிறக்கிறது. கன்னி ராசிக்கு தற்போது ஏழரை சனி நடக்கிறது. எனவே பொதுவாக கஷ்டமாகவே இருக்கும்.
உலகத்தில் புதுவிதமான தீவிரவாதங்கள் உண்டாகும். தீவிரவாதிகள் புதுவிதமாக யோசித்து புதிய வழியில் தாக்குதல் நடத்துவர். இந்த ஆண்டு போர் வருடம்தான்.
இந்தியாவிற்குள் எப்படி இருக்கும்?
இந்தியாவிற்குள் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
ஏப்ரலில் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் பெரிய மாற்றங்கள் நிகழும். இந்தியா கடக ராசி. அதனால் நெருக்கடி, பிரச்சினை, ஆட்சி கவிழ்ப்பு, தேர்தல் என பல மாற்றங்கள் ஏற்படும்.
இந்தியாவிற்கு வெளியே எப்படி இருக்கும்?
இந்தியா தனது கெளரவத்தை விட்டுக் கொடுக்காது.
ஈராக் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படுமா?
பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியான மாற்றம் செய்துள்ளதே, அதாவது அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்துள்ளது. இது நரேந்திர மோடிக்கு பயந்து செய்யப்பட்டுள்ளதாகவும் கருத்து உள்ளது. அதுபற்றி?
பாரதிய ஜனதா தலைவர்களின் ஜோதிடத்தை ஆய்வு செய்யும் போது இந்த குரு பெயர்ச்சி பாஜகவிற்கு புது பலத்தை அளிக்கிறது. அக்கட்சிக்கு எழுச்சியைக் கொடுக்கும்.