Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரு, சுக்ரன் ஏன் ராஜ கிரகங்கள்?

குரு, சுக்ரன் ஏன் ராஜ கிரகங்கள்?
, புதன், 20 ஜூலை 2011 (19:56 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: குரு, சுக்ரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்று ஏன் சொல்கிறார்கள்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், இந்த இரண்டு கிரகங்களும் அனைத்து வேதங்களையும் அறிந்த கிரகங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 4 வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் அறிந்த கிரகங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் ராஜ கிரகங்கள் என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், குருவிற்கு பிரகஸ்பதி என்று ஒரு பெயர் உள்ளது. அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை, ஞான சொரூபன் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அதுபோன்று சொல்கிறார்கள்.

சுக்ரன் இறந்தாரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மந்திரத்தை அறிந்தவர், அதனால் அவரைப் பார்த்து ஒரு பிரமிப்பு. குரு பிரகஸ்பதி என்னவென்றால், எந்த வேதத்தில், எந்த மொழியில் கேள்வி கேட்டாலும் சொல்வதற்கு சுமையிருக்காது. விற்பன்னர் என்பதால் அவரை ராஜ கிரகம் என்று சொல்கிறார்கள்.

சுக்ராச்சாரியார் என்னவென்றால், மற்ற வித்தைகள், அதர்வன வேதத்திற்கு உரியர். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. இறந்தாரையே எழுப்‌புவித்தல் என்பது பெரிய ஆற்றல்தானே, பிரம்ம ரகசியத்தையே தாண்டிய விஷயம்தானே, அதனால் இந்த இரண்டு கிரகங்களையும் ராஜ கிரகங்கள் என்று நாம் சொல்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil