1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள்.
இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். என்றாலும் சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், முன்கோபம், உறவினர் பகை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்களே! மனஉளைச்சல் ஏற்படும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள்:1,3,5,10,18
அதிர்ஷ்ட எண்கள்:7,9
அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய்,வியாழன்