Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி மாத எண் ஜோதிடம் 2, 11, 20, 29

ஜனவரி மாத எண் ஜோதிடம் 2, 11, 20, 29
, திங்கள், 31 டிசம்பர் 2012 (16:08 IST)
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிலும் வெற்றி கிட்டும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன்--மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.

மகனுக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

பிற்பகுதியில் நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் வலி, வீண் டென்ஷன், அலைச்சல், திடீர் செலவுகள் வந்துப் போகும். வேற்றுமதத்தினரால் அனுகூலம் உண்டு. சாதுக்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்:2,7,11,20,25
அதிர்ஷ்ட எண்கள்:2,6
அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள்:திங்கள்,புதன்

Share this Story:

Follow Webdunia tamil