Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி மாத எண் ஜோதிடம் 3, 12, 21, 30

ஜனவரி மாத எண் ஜோதிடம் 3, 12, 21, 30
, திங்கள், 31 டிசம்பர் 2012 (16:05 IST)
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். பழைய சொந்த&பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உடல் நலம் பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சளித் தொந்தரவு வந்து நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்யாணம் முடியும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சு வேண்டாம்.

அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்து ஆலோசிப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். அந்தஸ்து உயரும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்:1,3,10,12,27
அதிர்ஷ்ட எண்கள்:6,8
அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு,வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil