Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி மாத எண் ஜோதிடம் 4, 13, 22, 31

ஜனவரி மாத எண் ஜோதிடம் 4, 13, 22, 31
, திங்கள், 31 டிசம்பர் 2012 (16:03 IST)
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

ஆனால் டென்ஷன், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள் வந்து செல்லும். இனந்தெரியாத கவலைகள், விமர்சனங்கள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மையால் முன்னேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்:4,6,15,22,24
அதிர்ஷ்ட எண்கள்:2,7
அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய்,சனி

Share this Story:

Follow Webdunia tamil