5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அடகிலிருந்த நகையை மீட்டு புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
புதியவர்கள் நண்பர்களாவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வேலை அமையும். புது சொத்து வாங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள்.
அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் சந்தேகம் வந்து விலகும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். லாபம் பெருகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். திடீர் யோகம் தரும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள்:5,6,15,17,24
அதிர்ஷ்ட எண்கள்:1,3
அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன்,வெள்ளி