Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி மாதம் எண் ஜோதிடம் 7, 16, 25

ஜனவரி மாதம் எண் ஜோதிடம் 7, 16, 25
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ஒரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் திருமணம் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சிலர் இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். முன்கோபம், வாகன விபத்து, மனஉளைச்சல் வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. அக்கம்&பக்கம் வீட்டார் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்:2,7,15,20,25
அதிர்ஷ்ட எண்கள்:5,9
அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை,கருநீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன்,சனி

Share this Story:

Follow Webdunia tamil