Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடம் 8, 17, 26

Advertiesment
எண் ஜோதிடம் 2013
, திங்கள், 31 டிசம்பர் 2012 (15:44 IST)
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அனுபவ அறிவால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கல்யாணம், காதுகுத்து என்று வீடு களை கட்டும். சொந்த பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள்.

எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். அவ்வப்போது எதிலும் ஒருவித பயம், டென்ஷன் வந்துப் போகும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது.

வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினர்களே! மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உண்மையால் உயரும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள்:8,14,15,17,26
அதிர்ஷ்ட எண்கள்:3,5
அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா,இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள்:திங்கள்,வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil