9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் திடீர் யோகம் உண்டாகும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். பல முறை முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.
வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மகளின் கூடா நட்பு விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு.
வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும்-. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மாதத்தின் மையப் பகுதியில் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்துவிட்டு பிறகு அவதிபடவேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சிறுசிறு விபத்துகள், அலைச்சல் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிகழும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள்:3,6,9,10,18
அதிர்ஷ்ட எண்கள்:2,8
அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,கிரே
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய்,வெள்ளி