Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய கட்சிகள் எதுவும் பெரும்பான்மை பெறாது

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
தேசிய கட்சிகள் எதுவும் பெரும்பான்மை பெறாது
, திங்கள், 30 மார்ச் 2009 (13:40 IST)
காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், பாஜக, மார்க்சிஸ்ட் போன்றவையும் பலமாக இல்லை. தேசக் கட்சிகள் பலமின்றிப் போக என்ன காரணம்?

பதில்: நம்முடைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும்போது, இந்தியா கடக ராசி, கடக ராசியில்தான் கேதுவும் உட்கார்ந்திருக்கிறது. இந்தியாவிற்கு ஏழரை சனியும் நடக்கிறது. 26.09.2009 வரைக்கும் இந்தியாவிற்கு ஏழரை சனி நடக்கும். 28.10.2009 வரைக்கும் ராகு, கேதுவும் இந்தியாவிற்கு சரியில்லாமல் இருக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் இந்த தேர்தல் வருவதால் தேசியக் கட்சிகள் வலுவிழக்கும். அதில் முதன்மையாகக் கூறப்போனால் காங்கிரஸ் மிகவும் வலுவிழந்து மிகவும் பலவீனமானக் கட்சியாகிவிடும்.

கம்யூனிஸ்ட்டுகளும் பலவீனமாவார்கள். கம்யூனிஸ்ட்டுகளுக்குரிய கிரகம் செவ்வாய். இந்த செவ்வாய் வரும் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நீச்சமாகிறது. அப்படி நீச்சமாகும் போதெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்குள் மோதல் அதிகரிக்கும்.

அதேப்போன்று கம்யூனிச நாடுகளும் பாதிக்கப்படும். சீனாவில் இயற்கை சீற்றம், பின்னடைவு, திபெத்திய பிரச்சினை போன்றவற்றால் தலைகுனிவு ஏற்படும். அதேபோன்று பெளத்த நாடுகளுக்கும், அதாவது இலங்கை போன்ற நாடுகளில், ஆள்பவர்களுக்கு உயிர் சேதம் போன்றவை ஏற்படும். அக்டோபரில் இருந்து அந்த நிலை ஏற்படும். அதுவும் சரியான நேரமல்ல.

பா.ஜ.க.வை எடுத்துக் கொண்டால், அதன் தலைவர்களுடைய ஜாதகம் ஓரளவிற்கு பரவாயில்லை. மே மாதம் 1ஆம் தேதி குரு மாறுகிறது. குரு மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வக்ரமாகிறது. அப்படிப் போகும்போது பா.ஜ.க.வுக்கு அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது...

தனிப்பட்ட வகையில் தனிப்பெரும் கட்சி என்ற நிலை பா.ஜ.க.விற்கு ஏற்படும். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அருதிப் பெரும்பான்மை அந்தக் கட்சிக்கும் கிடைக்காது.

அதனால் 3வது அல்லது 4வது கட்சிகள் அமர்ந்து கொண்டு நீங்கள் ஆதரவு கொடுங்கள் என்று கேட்கும்.

சிம்மச் சனி ஒரு கட்சி ஆட்சி போன்ற பலமான நிலைகளை சிதறடித்துவிடும். ஒருமைப்பாட்டு உணர்வைக் கொடுக்காது. சிம்மச் சனியின் தாக்கமே ‘தலைக்கு தலை நாட்டாம்மை, தடி எடுத்தவன் தண்டல்காரன’ என்பது போல் செய்வது சிம்மச் சனியின் வேலை.

சூரியனுக்கும், சனிக்கும் ஆகவே ஆகாது. சூரியன் வீட்டில் போய் சனி அமர்ந்தாலே, அந்த ஒருமைப்பாட்டு உணர்வை கெடுத்துவிடும்.

ஆசியாவிலேயே இந்தியா தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த முறைத் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும். இந்தியாவிற்கும் ஏழரை சனி இருப்பதால் இந்த நிலை ஏற்படும்.

பூராடத்தில் தேர்தல் துவங்கி பூராடத்தில் முடிகிறதும் சரியாக இல்லை. ‘பூராடத்தில் நோயில் படுத்தவர் தேறார், பூராடத்தில் புறப்பட்டவர் மீளார’ என்று பழமொழிகள் உள்ளன.

பூராடத்தில் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் தேறுவது கடினம், அதேபோல், அந்த நட்சத்தில் பயணம் மேற்கொண்டால் விபத்துகள், எதற்காக போனோமோ அந்த நோக்கம் வீணாகுதல் போன்றவை ஏற்படும்.

இதுபோன்ற நாளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் ரொம்ப சவாலாக இருக்கும். வாக்குப்பதிவு ஓரளவிற்கு குறையவும் வாய்ப்புண்டு. வன்முறைகள் அதிகமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil