5 ஆம் இடம்தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ஆம் இடத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக 5ஆம் இடத்தில் சூரியனோ, சந்திரன், செவ்வாயோ அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அபார்ஷன் ஆகும். முதல் குழந்தையே அபார்ஷன் ஆகி பின்புதான் குழந்தை பிறக்கும்.
இதில், எத்தனை உருவாகும், எத்தனை நிற்கும், எத்தனை குழந்தை பிறக்கும் என்பது எல்லாமே புத்திர பாகம் என்பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
உத்திர காலாமிர்தம், பிருகத் ஜாதகம் என்றொரு சமஸ்கிருத நூலிலும் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
ஜாதக அலங்காரம் என்ற நூலிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. எந்தெந்த காலகட்டத்தில் கரு சிதைவு ஏற்படும், எந்த காரணத்தினால் ஏற்படும் என்பதையெல்லாம் கூறியுள்ளது. எந்த தசா புக்தி நடக்கும்போது நடக்கும் என்பதையும் இந்நூல் கூறுகிறது. இதுவும் விதிக்கப்பட்டதுதான்.
கர்ப உற்பத்தி என்பதும் கூட ஒரு சில தசா புக்திகளில்தான் நடைபெறுகிறது. குரு அந்தரம், குரு புக்தி, குரு ராசியையோ, லக்னத்தையோ பார்க்கும்போது அல்லது குரு 5ஆம் ஸ்தானத்தை பார்க்கும் காலக்கட்டத்தில்தான் குழந்தையே உருவாகிறது என்று சுக்ர நாடி என்ற நூல் சொல்கிறது.
குருதான் குழந்தை உருவாவதற்கு அதாவது சுக்லம், சுரோனிதம் கலப்பிற்கு முக்கியமாக அமைகிறது. கலவிக்குக் காரணம் சுக்ரன். அது குழந்தையாக உருவாவதற்கு குருவின் பார்வை முக்கியம். அதனால்தான் குரு ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்க்கும் போது, 5ஆம் இடம் சுக்ரன் திசையைப் பார்க்கும் போதோ அல்லது எந்த தசா அல்லது எந்த புக்தி நடந்தாலோ அந்த தசா அல்லது அந்த புக்திக்கு குருவின் அந்தரம், தசா புக்தி நடந்தால் அப்போதுதான் குழந்தை உருவாகும். அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருவாகும் கருதான் கருக்கலைப்பிற்கு உட்படும்.
அவர்களாகவே கருக்கலைப்பு செய்து கொள்வது பற்றி?
அதுவும் அவர்களது தசாபுக்தியின் அடிப்படையிலேயே நடக்கும். அதாவது ஒரு சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போடுவது உண்டு. அப்போது அவர்களுக்கு குழந்தைக்கான தசா புக்தி நடக்காது. அதனால் இயற்கையிலேயே அவ்வாறு அமைந்துவிடும்.
அதுபோலத்தான் ஒரு சிலருக்கு அஷ்டமத்து சனி, ராகு போன்ற தசைகள் நடக்கும்போது நாங்களே குழந்தைப்பேறைத் தவிர்க்குமாறு அறிவுரை வழங்குகிறோம்.
கருக்கலைப்பு செய்து கொள்வது பாவமா?
இல்லை. கரு குழந்தையாக உருவாகாத தசா புக்தி நடக்கும்போது உருவாகும் கரு தானாகவோ அல்லது தாங்களாகவோ கலைப்பு செய்யும்படிதான் அமையும். அதை ஒரு பாவச்செயலாகக் கருத முடியாது.
என்னென்ன கிரக அமைப்பு இருக்கும்போது கருச்சிதைவு ஏற்படும் என்பதும் இருக்கிறது.