Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலிகள், அரவாணர்க‌ள் ‌பிற‌ப்பை க‌ணி‌க்க இயலுமா?

- ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (14:52 IST)
- ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
பிறப்பிற்கான இடம் 5ம் இடம். ஒரு பெண்ணின் 5வது இடத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5ம் இடமும் 7ம் இடமும் முக்கியமானது. புதனையும் சனியையும் அலி கிரகம் என்று சொல்லலாம். ஆனால் அது எங்கு இருந்தாலும் அலி கிரகம் என்று சொல்லக் கூடாது.

சூரியனுக்கு மிகக் குறுகிய பாதையில் இருந்தால் அலித் தன்மை அதிகரிக்கும். சூரியனை விட்டு விலகி சுப நட்சத்திரத்தில் உட்கார்ந்திருந்தால் அலித் தன்மை விட்டு சுபத்தன்மை அளிக்கலாம்.

வரன் ஜாதகத்திலும் 5அம் இடத்தில் அலி கிரகம். பெண்ணின் ஜாதகத்திலும் 5க்கு உரிய கிரகம் வலுவிழந்து அலி கிரகத்துடன் சேர்ந்து காணப்ப‌ட்டா‌ல் அவ‌ர்களு‌க்கு குழந்தை பிறக்காது. அப்படி குழந்தை பிறந்தால் அ‌க்குழ‌ந்தை அலித்தன்மை உடையதாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று ஒரு மணமக்களுக்கு ஜாதகத்தைப் பார்த்து அலிப் பிள்ளைகள்தான் பிறக்கும் என்று கணி‌த்து கூ‌றினே‌‌ன். அதையும் மீறி அவர்கள் திருமணம் நடந்தது. அவர்களுக்குப் பிறந்த 3 பிள்ளைகளுமே அலித்தன்மை உடையதாக இரு‌ந்தது. அவர்களை 2004ல் நான் சந்தித்தேன். அவர்கள் மிகவும் வரு‌த்த‌த்துட‌ன் எ‌ன்‌னிட‌ம் பே‌சினா‌ர்க‌ள்.

விந்தணுக்கள் குழந்தை பாக்கியத்தை அளிக்கும். பொதுவாக விந்தணுக்கள் வெள்ளை நிறம். ஆனால் விந்தணுக்கள் நிறம் மாறுபடும். பெரிய ‌நிற மாற்றமல்ல மெல்லிய மாற்றம்தான். நீர்த்த தன்மை உள்ள விந்தணுக்களும் உள்ளன, அவை அரவாணிப் பிள்ளைகளைப் பெற்றுத்தரும்

அதனை‌த்தா‌ன் த‌ற்போது, குரோமோசோன்களின் எண்ணிக்கை மாறுபட்டால் பாலினத்தன்மை மாறுபடுகிறது என்று தற்போது அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது குரேமோசோம்களின் எண்ணிக்கை 60, 40 விழுக்காடுதான் இருக்கிறது என்று தற்போது ஆராய்ந்து கூறுகிறார்கள். இது ஜீன்களின் குறைபாடு, அதை எதுவும் செய்ய முடியாது எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள ் கை‌விடு‌கிறா‌ர்க‌ள ். இதுபோ‌ன்று நீர்ப்பு தன்மை கொண்ட ஜாதகங்களை வேண்டாம் என்று சொல்கிறோம்.

பொருத்தங்கள் பார்க்கும்போது சமூக அந்தஸ்து, ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பாக்கியம், அன்யோன்யம், பொருத்தம் இருக்கிறத ா என்று பார்த்து திருமணம் நிச்சயிக்க வேண்டும்.

ச‌ரியா ன முறை‌யி‌ல ் ஜாதக‌ம ் பா‌ர்‌த்த ு ‌ திருமண‌ம ் செ‌ய்தா‌ல ் அ‌ல ி, அரவா‌ணிக‌ளி‌ன ் ‌ பிற‌ப்பை‌த ் தவிர்க்க முடியும்.

சுவஷ்வ நாடியில் த‌ம்ப‌திக‌ள் கூடினா‌ல் இது போன்ற பிள்ளைகள் பிறக்கும் என்று கூறப்படுகிறதே?

இதுபற்றி திருமூலர் தனது நூல்களில் கூறியுள்ளார். எப்படி புனர வேண்டும், எந்த நாளில் புணர வேண்டும் என்பதை கூறியுள்ளார். அவர் சித்தர் என்றாலும் புணர்வது குறித்து விரிவாக அளித்துள்ளார். அதேப்போல பல சித்தர்கள், ரிஷ‌ி தத்துவம், முனி தத்துவம் என பெண்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து இந்த தத்துவப் பெண்கள் இந்த தத்துவ ஆணுடன் சேர வேண்டும் என்று அன்றைய காலத்திலேயே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

காற்றோட்டம் சூரியக் கலை, சந்திரக்கலை, பின் கல ை, மு‌ன்கலை எ‌ன்பது நமது மூ‌ச்சு‌த் த‌ன்மையாகு‌ம். நம்மை ஆளும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் நாம் மூச்சு விடும்தன்மை அமையும். நமது லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அது ஒரு நெருப்பு கிரகம். லக்னத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் அப்போது சூரியக் கலை ஓங்கி இருக்கும், சூரிய நாடி அதிகரிக்கும். ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு மாதிரி, அதுவும் கிரகத்தின் அடிப்படையில் அமையு‌ம். பித்த நாடி, பித்த சாரீரம், உஷ்ண நாடி என அனைத்துமே கிரகங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன.

6 ஆம் இடம் ரோக ஸ்தானம், அந்த இடத்தில் கிரகம் வலுவாக இருந்தால் அதற்கேற்ற நோய் வரும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையாக வைத்தே அமையு‌ம ்.

அலி கிரகம் வலுவாக இருக்கும்போது அவர்களது மூச்சுக்காற்று அப்படித்தான் இருக்கும். மேலும் மற்ற நேரங்களில் அவர்களது மூச்சுக்காற்றில் சூரிய கலை, தென்கலை என இருந்தாலும், அவர்கள் புணர்ந்து உயிரணு வெளியேறும்போது அவர்களது மூச்சுக்கலையில் ஒரு பின்னம் ஏற்படும். அது ஒரு சக்தி வெளிப்பபாடு. விந்தணு வெளிப்பாடு நிறைவுக்கான காரியம். அப்போது அவர்களது உடல்நிலை நாடி நடுநிலை வகிக்கும். ஒர ு ப‌க்கமு‌ம ் இ‌ல்லாம‌ல ் இர‌ண்ட ு நாடியு‌ம ் இணை‌ந் த ஒரு பின்னல் ஏற்படும். அதனா‌ல ் அ‌லி‌க ் குழ‌ந்தைக‌ள ் ‌‌ பிற‌க் க வா‌ய்‌ப்ப ு அமை‌கிறத ு. அலி கிரகங்களின் வலிமை அதிகரிக்கும்போது தான் ஹோமோசெக்ஸ் அதிகரிக்கும். மாற்று இனத்தாரை திருப்திப்படுத்த முடியாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் ஓரின சேர்க்கையின் மீது ஆர்வம் போகும்.

அதுபோன்ற ஜாதகங்களும் நிறைய இருக்கின்றன. ஒருவரைப் பார்த்தால் ஆண்மகனுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். ஆனால் அவர் தாம்பத்தியத்தில் பலவீனமாக இருப்பார். அல்லது அவருக்கு அலி குழந்தை பிறக்கும். அது அவரது ஜாதகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments