இந்தியா - ஆஸ்ட்ரேலியா இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் கடுமையாக இருக்கும் என்றும், முதல் டெஸ்ட்டில் பாதகமான சூழல் இந்திய அணிக்கு இருந்தாலும் இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் சாதகமாக இருக்கும் என்ற ும ் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கூறியுள்ளார்.
மெல்போர்னில் நாளை துவங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு கடும் சோதனையாக இருக்கும் என்றும், அடுத்த இரண்டு நாட்கள் ஓரளவிற்கு இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறியுள்ள வித்யாதரன், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று கூறினார்.
ஜனவரி 2 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை சிட்னியில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று நாட்கள் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என்றும், 5 ஆம் தேதி அதாவது 4வது நாள் ஆட்டம் கடுமையானதாக இருக்கும் என்றும், கடைசி நாள் இந்தியாவிற்கே சாதகமாக உள்ளதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் வித்யாதரன் கூறியுள்ளார்.
webdunia photo
WD
பெர்த்தில் 16 முதல் 20ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மூன்றாம் டெஸ்ட் போட்டியில் முதல் நான்கு நாட்களும் இந்தியாவிற்கு மிக சாதகமாகவே உள்ளதால் வெற்றியை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ள வித்யாதரன், கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள அடிலெய்டில் டிசம்பர் 24 முதல் 28 வரை இரு அணிகளுக்குமே சாதகமான நிலை நிலவுவதால் அந்த டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக அமர்வார் என்று வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கூறியவர் வித்யாதரன். இவர் தற்பொழுது அளித்துள்ள கணிப்பின்படி, இந்திய அணி, ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரை 2-1 என்ற வெற்றி கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும். பார்க்கலாம்!