Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?

Advertiesment
காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும்.

பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர்.

எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.

காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும்.

லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காம உணர்வு இல்லாமல் போகும் நிலை: ஒருவர் ஜாதகத்தில் சில கிரகங்கள் நீச்சம் பெறும் சமயத்தில் அவருக்கு காம உணர்வு இல்லாமல் போய்விடும். சிறப்பாக தாம்பத்யம் நடத்திக் கொண்டிருந்த தம்பதிகளுக்குள் திடீரென உடல் தொடர்பின்றிப் போய்விடும்.

உதாரணமாக தனது கணவர்/மனைவி கடந்த சில மாதங்களாக தன்னை நெருங்கவிடவில்லை என கூறிக் கொண்டு சில தம்பதிகள் எங்களிடம் வருகின்றனர். ஆனால் இது உடல் ரீதியான குறையாகப் பார்க்க முடியாது. காரணம் சம்பந்தப்பட்டவருக்கு அப்போது நீச்ச கிரகத்தின் தசை நடந்து கொண்டிருக்கும்.

அலி கிரகங்களின் தசாபுக்தி நடந்து கொண்டிருக்கும் ஜாதகர் உடலுறவில் பூரண நிலையை அடைய முயற்சிக்க மாட்டார். தனது துணையை முத்தமிட்டும், தீண்டுவதிலும் இன்பம் காண்பவராக மட்டுமே இருப்பார். பிறப்புறுப்பில் தொடர்பு உடைய உறவு அந்தத் தம்பதிகளுக்குள் நிகழாது.

இதுபோன்ற பாதிப்புடன் என்னைத் தேடி வந்த ஜாதகருக்கு, சனி, புதன், கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றாக ஒரே வீட்டில் அமர்ந்திருந்தது. அப்போது அவருக்கு புதன் தசையில் கேது புத்தி நடந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக உடலுறவில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பதை இருவரிடமும் எடுத்துக் கூறினேன்.

இதன் பின்னர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பரிகாரங்களைக் கூறியதுடன், அடுத்த 6 மாதத்தில் சுக்கிர புக்தி வருகிறது. எனவே விரைவில் அவரது எண்ணங்கள் மாறுபடும்; பயப்படத் தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன்.

Share this Story:

Follow Webdunia tamil