சரஸ்வதி, லட்சுமி உருவப்படங்களை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
, திங்கள், 5 ஜனவரி 2009 (14:52 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் விநாயகருடன் கூடிய உருவப்படங்களை வீட்டின் எந்தப் திசையிலும், எந்தப் புறமும் (வீட்டின் வெளிப்புறம் அல்லது உட்புறம் நோக்கி) வைக்கலாம். அவருக்கு வாஸ்து கிடையாது. விநாயகர் தவிர்த்த தெய்வங்களின் உருவப்படங்களையும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி வைத்து வணங்குவது நல்லது. சிலர் பெருமாளை வடக்கு பார்த்து சேவிப்பது நல்லது என்று கூறுவதால் பெருமாள் படத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.சூரியன் உதிக்கும் திசை நோக்கி அல்லது மறையும் திசை நோக்கி மந்திரங்களை உச்சரித்து தெய்வப் படங்களை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். ஏனென்றால் சூரியன்தான் அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாகத் திகழ்பவர். ஒரு 10 நாளுக்கு சூரியன் இல்லையென்றால் உலகின் வாழ்க்கைச் சூழல் சிக்கலாகிவிடும். சங்க காலத்தில் சூரியன் இயக்கத்தை அடிப்படையாக வைத்தே தெய்வங்களை வணங்குவது, மந்திரங்களை ஜெபிப்பது போன்றவற்றை முன்னோர்கள் மேற்கொண்டதையும் நினைவில் கொள்ள வேண்டும். கேள்வி: அறிவுக் கடவுளான சரஸ்வதியின் படத்தை வீட்டிற்கு வெளிப்புறம் நோக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் நமது அறிவு உலகிற்கு பயன்தரும் வகையில் வெளிப்படும். ஆனால் செல்வத்தை வழங்கும் லட்சுமியின் உருவப்படத்தை வீட்டின் உட்புறம் நோக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் செல்வம் வீட்டை விட்டு வெளியேறாது என்று ஒரு சிலர் கூறுவதில் உண்மை உள்ளதா?லட்சுமி, சரஸ்வதி உருவப்படங்களை வீட்டின் உட்புறம் நோக்கி வைப்பதே சிறந்தது. அப்போதுதான் இந்த இரு கடவுள்கள் வழங்கும் அருள் வீட்டிற்கு உள்ளே கிடைக்கும்.