Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பில்லி, சூனியம் – காத்துக்கொள்வது எப்படி?

பில்லி, சூனியம் – காத்துக்கொள்வது எப்படி?
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:43 IST)
பில்லி, சூனியம் என்பது என்ன? அதில் இருந்து கிரகங்கள் நம்மைக் காப்பாற்றுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

இதுபற்றி பழைய நூல்கள் கூறுகின்றன. உதாரணத்திற்கு உத்ர காலாமிர்தம் என்ற நூல் இதுபற்றி எடுத்துரைக்கிறது.

கிரகங்கள் பலவீனமடையும் போது இதுபோன்ற துர் சக்திகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. பில்லி, சூனியம், மந்திரம் என்பதை மறுக்க இயலாது. இதுபோன்றவற்றிற்கு ஆட்பட்டு அல்லல்படும் எத்தனையோ ஜாதகங்களை பார்த்துள்ளோம்.

காக்கையர் நாடி என்ற புத்தகத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது ராகு திசையில் சனி புக்தி, சனி திசையில் ராகு புக்தி, கேது தசை, மாறகத்தைத் தரக்கூடிய மாறக ஸ்தானங்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

மேஷ லக்னத்திற்கு “இரண்டு, ஏழாம் இடத்திற்குட்பட்டவன் பாவியாகி உயிரைக் கொல்வான” என்ற ஒரு பாடல் இருக்கிறது. அதாவது இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவன் பாதியாகி அந்த தசை நடக்கும்போது உயிரை எடுப்பான்.

பூர்ண ஸ்தானத்திற்கும் ஆயுள் ஸ்தானம் என்பது பொதுவாக 8. எட்டாம் இடத்தில் சனி, ராகு, கேது போன்றவை உட்கார்ந்து அந்த கிரகத்தை இன்னொரு பாவ கிரகம் பார்த்து, வேறு எந்த சுப கிரகமும் பார்க்காமல் இருந்தால் அப்போது பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்படுவார்கள்.

நல்ல சக்தி வாய்ந்த தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைத்தால் அது வேலை செய்யாது. ஏனெனில் அவரது தசா புக்தி பலம் வாய்ந்தததாக இருக்கிறது. ஆனால் அவருக்கு பலவீனமான தசா புக்தி நடக்கும்போது அந்த பில்லி, சூன்யமும் சேர்ந்து தொல்லை கொடுக்கும்.

கிரகங்கள் நல்ல நிலையில் நல்ல தசை நடக்கும்போது நல்ல மனிதர்களின் தொடர்பு ஏற்படுவது போல், கெட்ட தசை நடக்கும்போது கெட்டவைகளின் தாக்கம், பாதிப்பு ஏற்படுவது நடக்கும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது.

அதேபோல நல்ல தசா புக்தி நடக்கும்போது பில்லி, சூன்யம் வைத்து பாதிக்கப்பட்டதாக இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் நல்ல தசா புக்தி நடக்கும்போதும், அஷ்டமத்து சனியினால் கெட்ட சக்திகளின் பாதிப்பு வந்து போக வாய்ப்புண்டு. கிரகங்களின் துணையில்லாமல் எதுவும் நடக்காது.

ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைக்க வேண்டும் என்றால் அவருடைய புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும். இது இல்லாமல் பில்லி, சூன்யம் வைக்க முடியாது.

நல்ல தசாபுக்தி நடக்கும்போது இதுபோன்ற துணிகள் கிடைக்காமலேயே போய்விடும். இல்லையென்றால் பில்லி, சூன்யம் வைக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

ஆனால் கிரகநிலை சரியில்லாத நேரத்தில் தாமாகவே இதுபோன்ற பொருட்களை அளிக்கவோ, தானாகவே சென்று சிக்குவதோ நேரிடும்.

Share this Story:

Follow Webdunia tamil