Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றுக்கு அருகே செல்பி: விபரீதத்தில் முடிந்த காதலர்கள் ஆசை!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (19:55 IST)
சென்னை அருகே இளம் ஜோடி கிணற்றுக்கு அருகே செல்பி எடுக்க முயற்சித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆவடி அருகே உள்ள மிட்டனமல்லி கண்டிகை பகுதியை சேர்ந்த இளைஞர் அப்பு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டெஃபி என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த சூழலில் இளம் ஜோடிகள் அருகிலுள்ள விவசாய பகுதியை சுற்றி வந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகே இருவரும் செல்பி எடுத்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அப்போது தவறி காதலர்கள் உள்ளே விழுந்திருக்கிறார்கள். விழும்போது தலையில் அடிப்பட்ட ஸ்டெஃபி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அப்புவை அந்த பக்கமாக சென்ற விவசாயி ஒருவர் தண்ணீரில் குதித்து காப்பாற்றியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக வேண்டிய சூழலில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோக சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments