Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் வணிகத் திருவிழா 2023-க்கு நீங்கள் எல்லோரும் வருகை தர வேண்டும் - முதல்வர் முக. ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, சனி, 8 ஜூலை 2023 (16:23 IST)
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த #வேளாண்வணிகத்திருவிழா2023-க்கு நீங்கள் எல்லோரும் வருகை தர வேண்டும் என உள்ளன்போடு அழைப்பு விடுக்கிறேன் என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:

‘’வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றிட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவந்தது, இப்போது வேளாண் வணிகத் திருவிழா 2023 மூலமாக நனவாகியிருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த #வேளாண்வணிகத்திருவிழா2023-க்கு நீங்கள் எல்லோரும் வருகை தர வேண்டும் என உள்ளன்போடு அழைப்பு விடுக்கிறேன்.

176 கண்காட்சி அரங்குகள் இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நமது பாரம்பரிய முறைப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் புதிய தலைமுறையினரையும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த உற்பத்திப் பொருட்கள் பல்வேறு Online தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

நமது உழவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி அவர்களது உழைப்பைப் போற்றுங்கள்!’’  என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவ, மாணவிகளின் உடல் நல சோதனை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்