Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த பெண் குழந்தையை நாய்களுக்கு உணவாக்கிய பெற்றோர்

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (14:32 IST)
சென்னை அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர்கள் சாலையோரத்தில் வீசியதில் நாய்கள் அந்த குழந்தையை கடித்து குதறின.


 

 
சென்னை தாமபரம் அருகே சிட்லாபாக்கத்தில் லெனின் சாலையோரத்தில் கடந்த 11ஆம் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வீசப்பட்டு, அந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறின. இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 
 
காவல் துறையினர் சென்று பார்த்த போது அந்த குழந்தையின் கால் பகுதி துண்டிக்கப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்டது. அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குழந்தையை சாலையோரத்தில் வீசியது யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து சிட்லாபாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர்(26) மற்றும் அவரது மனைவி சாந்தி(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
ராம் பகதூர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் பத்து வருடங்களாக சென்னையில் காவலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால், சாலையோரத்தில் வீசி சென்றதாக விசாரணையில் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments