Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கொலை செய்தாலும் தப்பில்லை: காவல்துறை அதிகாரி ரவி

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (21:38 IST)
போலீசார்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள எப்படி என்கவுண்டர் என்ற உரிமை இருக்கின்றதோ, அதே போல் பெண்கள் தங்களுடைய உயிரை மற்றும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்தாலும் தவறில்லை என்று தமிழக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒரு கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரை தற்காப்புக்காக கொலை செய்ததாகவும், இந்த வழக்கில் அந்த பெண் உடனடியாக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்றும் அதனால் பெண்கள் தங்கள் மானத்தையும் உயிரையும் காப்பாற்றி கொள்ள கொலை செய்தாலும் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதே போன்ற ஒரு பட்டியலை சென்னை மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பெயர்கள் கொண்ட பட்டியல் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

அடுத்த கட்டுரையில்
Show comments