Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் அந்த படம் பார்க்க மாட்டோம்! – மன்னிப்பு கேட்ட மாணவிகள்!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 19 டிசம்பர் 2019 (17:31 IST)
ஆபாச படம் பார்த்த மாணவிகள் தன்னை நேரில் சந்தித்து மன்னிப்பி கேட்டதாக டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சிறார்களை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச படங்களை பார்ப்போர், பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்கள் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குற்றப்பிரிவு தடுப்பு டிஜிபி ரவி பேசிய போது சிறார் வீடியோ பார்க்கும் 30 நபர்கள் குறித்த பட்டியலை சென்னை காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய டிஜிபி ரவி ”உலகில் நடைபெறும் குற்றங்களில் பெரும்பான்மையானவை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரானவையாக இருக்கின்றன. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் செயலி கொண்டு வரப்பட்டுள்ளது அனைத்து பெண்களும் அதை உபயோகிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆபாச பட விவகாரம் குறித்து பேசிய அவர் இரண்டு மாணவிகள் தன்னை சந்தித்து ஆபாச படம் பார்த்ததற்காக மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியை அடுத்து அசாமிலும் இணைய சேவை முடக்கம்!