Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் சேலையை இழுத்து அடித்து தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் பெண்ணின் சேலையை இழுத்து அடித்து தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

J.Durai

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:11 IST)
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வன் மகன் சுரேந்தர், (24) கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகள் பவித்ரா, (23) பட்டப் படிப்பு முடித்துவிட்டு கோச்சிங் கிளாஸ் சென்று படித்து வருகிறார். சுரேந்தர், மற்றும் பவித்ரா, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த காதல் இன்று வரை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்த நிலையில், நேற்று மாலை இது தொடர்பாக சுரேந்திரின் தந்தை செல்வம் இது நமக்கு சரியாக இருக்காது. அவர்கள் வேறு சமூகம் நாம் வேறு சமூகம் என்று சொல்லி கண்டித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று மாலை சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர் காலை முதல் வீட்டிற்க்கு வரவில்லை. 
 
அதே நேரத்தில் பவித்ராவும் வீட்டை விட்டு காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சுரேந்திர் தான் தனது மகள் பவித்ராவை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான் என்ற கோபத்தில் பவித்ராவின் தந்தை மற்றும் உறவினர்கள் 20 பேர் சுரேந்தர் வீட்டுக்கு இன்று காலையில் வந்து சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும் அவரது தாய் முருகம்மாள் வீட்டில் இருக்கும்போது செல்வத்தை எங்கே உனது மகன் எனது மகளோடு அனுப்பி வைத்து விட்டாயா என்று சொல்லி அடித்து சட்டையை கிழித்தபோது, செல்வத்தின் மனைவி முருகம்மாள் தடுத்ததாகவும் அப்போது பெண் என்று கூட பார்காமல் முருகம்மாளை அடித்து கணவன் கண்முன்னே புடவை இழுத்து, துன்புறுத்தி உள்ளதாகவும், அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன்சுப்பிரமணி, தடுத்திருக்கிறார். அவரையும் அடித்து கழுத்தை இறக்கி இருக்கிறார்கள்.
 
பின்பு, சுரேந்திரன் தாய் முருகம்மாளை இருசக்கர வாகனத்தி இழுத்து உட்கார வைத்து 20 பேர் கொண்ட கும்பல் கடத்துச் சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
 
அடி வாங்கிய சுரேந்திரனின் தந்தை செல்வம், செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன்சுப்பிரமணி இருவரும் அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு, மொரப்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு..? ஒன்னு கூட வெடிக்கல! - சுதந்திர தின விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!