Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் - தர்ணாவில் ஈடுபட்ட பெண்மணி

வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் - தர்ணாவில் ஈடுபட்ட பெண்மணி
, வியாழன், 24 நவம்பர் 2016 (18:30 IST)
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் பகுதியில் வசித்து வருபவர் மரகதம் (வயது 65), கரூர் எஸ்.பி.ஐ (பாரத ஸ்டேட் பாங்க்) சேமிப்பு கணக்கை தொடங்கி, கடந்த சில வருடங்களாக சேமிப்பு கணக்கில் வரவு செலவு செய்து வருகிறார். 


 

 
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஒரு மொபைல் நம்பரிலிருந்து மரகதத்தின் மொபைல் எண்ணிற்கு ஒரு போன் வருகின்றது. அப்போது உங்களது மொபைலுக்கு நாங்கள் பேங்கில் வேலை செய்வதாகவும், அந்த எஸ்.எம்.எஸ் அனுப்பபட்டது. சரி என்றால் ok என்ற பட்டனை அழுத்தி விடவும் என்றும் சொல்லி, கூறியதையடுத்து எனக்கு படிக்கத்தெரியாது என்று கூறி, ரகசிய எண்ணை எப்படியோ வாங்கியுள்ளனர். 

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
 
இது குறித்து அந்த எஸ்.பி.ஐ பேங்கிலும் சென்று கூறியுள்ளனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்ற எஸ்.பி.ஐ நிர்வாகம் கூறியதையடுத்து கரூர் டவுன் போலீஸிடம் புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது கணக்கில் ரூ 49 ஆயிரம், ரூ 49 ஆயிரம் என்று இரண்டு முறையாக ரூ 98 ஆயிரம் கணக்கில் வரவு வைத்த நிலையில், வங்கியின் புதிய வரைமுறைக்கு ஏற்றவாறு வாரம் 24 ஆயிரம் மட்டும் கடந்த வாரம் எடுத்துள்ளார். 
 
இந்நிலையில் இந்த வார கணக்கில் மரகதம் ரூ 24 ஆயிரம் எடுக்க வரும் போது தங்களது கணக்கில் பணமில்லை என்று காசாளர் கூறியுள்ளார். இது குறித்து வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தையடுத்து ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ 48 ஆயிரம் தொகை எடுத்துள்ளது தெரியவந்தது. 
 
எனவே, வங்கியிடமும், காவல்துறையிடமும் ஏற்கனவே இது போல நடப்பதையறிந்து மரகதம் கூறிய புகாருக்கு வங்கி செவிசாய்க்க வில்லை என்பதால் அந்த வயதான பெண்மணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
மேலும் ஏற்கனவே ரூ 500 மற்றும் ரூ 1000 த்தில் பொறுமையை இழந்தவர்கள் தற்போது இது போன்ற ஆன்லைன் மோசடியில் பணம் எடுப்பது அவர்களது பொறுமையை மிகவும் இழக்க வைத்துள்ளது. மேலும் மரகதம் மற்றும் உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நீடித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிக்கணக்கான பணத்துடன் மாட்டிய பாஜக கூட்டணி கட்சி தலைவரின் மருமகன்