Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்

Webdunia
திங்கள், 20 மே 2019 (14:08 IST)
கிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த  கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 
 
இதனால் இருவரும் அவ்வப்போது உடலூறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இது கோவிந்தராஜிற்கு தெரிய வந்ததும், அவர் கஸ்தூரியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், கஸ்தூரி இதை கண்டுக்கொள்ளாமல், தனது கள்ள உறவை தொடர்ந்துள்ளார். 
இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே இந்த விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் பொறுமை இழந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். 
 
ரத்த வெள்ளத்தில் சரிந்த கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜும் போலீசாரிடம் சரணடைந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments