Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை சந்திக்கின்றாரா அமைச்சர் உதயநிதி? என்ன காரணம்?

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:24 IST)
தமிழக இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நாளை அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது விளையாட்டு துறையை மேம்பாடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட ஒரு சிலரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments