அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை டெல்லி ஹைகோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் ராணுவம் விமானப்படை கடற்படை என முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபத் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
தேச நலனுக்காகவும் பாதுகாப்பு படை மேம்படுத்தவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அக்னிபத் திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது