Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்த ரெயில்வே ஊழியரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் !

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (10:45 IST)
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல்  மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்ததால் ரெயில்வே ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.  


 
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே  இடையம்பட்டியை சேர்ந்தவர் அர்வின் (வயது 32). இவர், பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் ரெயில் நிலையத்தில் புக்கிங் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அஸ்வினி (27). இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு எஸ்வந்த் (5) என்ற மகனும், பிரனித்தா (2) என்ற மகளும் உள்ளனர்.
 
 
இந்த நிலையில் அஸ்வினிக்கு அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவருடன் பழகி உள்ளார். பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அர்வினுக்கு தெரியவரவே, மனைவி அஸ்வினியை கண்டித்துள்ளார். கடந்த 25-ந் தேதி அர்வின் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது மகளை தூக்கிக்கொண்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
 
வேலை முடிந்து அர்வின் வீட்டிற்கு வந்தார். அப்போது மகன் எஸ்வந்த் மட்டும் தனியாக இருந்தான். அவனிடம் கேட்ட போது, அம்மா, தங்கையை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவருடன் சென்றதாக தெரிவித்தான். பின்னர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் அஸ்வினி கிடைக்கவில்லை.
 
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.  அஸ்வினி தனது மகளுடன் கள்ளக்காதலன் சுபாசுடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments