புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் டாஸ்மாக் இல்லாதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:58 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டது என்பதை பார்த்தோம். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வணிகத்திற்கு அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது
 
ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அதே போல் பார் இயங்குவதற்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிகளில் மதுபான விற்பனைக்கு ஏன் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளதை அளித்து தமிழக அரசின் சார்பில் என்ன பதில் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments