Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ட்டின் மீது திடீர் ரெய்டு ஏன்?

Advertiesment
மார்ட்டின் மீது திடீர் ரெய்டு ஏன்?
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (22:15 IST)
இந்தியா முழுவதும் லாட்டரி தொழில் செய்து வரும் மார்ட்டின் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு செய்து வரும் நிலையில் இந்த ரெய்டே திமுகவுக்கு செக் வைக்க என அரசியல் வட்டாரங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு அளவுக்கு திமுகவால் பணம் செலவு செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் பணப்பற்றாக்குறை மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் குறி வைக்கப்பட்டு வருமான வரித்துறையினர் ரெய்டு செய்ததாக கூறப்படுவதும்தா
 
இதனால் திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுக்கவே பல தொழிலதிபர்கள் பயந்தனர். திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்தால், தங்கள் நிறுவனத்திற்கு ரெய்டு வந்துவிடுவார்களோ என்ற பயம்தான் இதற்கு காரணமாக இருந்தது
 
இந்த நிலையில் வரும் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மார்ட்டின், திமுகவுக்கு ஒரு பெரிய தொகை கொடுத்ததாகவும், அதனால் தான் அவரது நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படுவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையாக இருக்குமா? அல்லது உண்மையிலேயே வதந்திதானா? என சீரியஸாக வாக்குவாதங்கள் நடந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக புகார் அளித்த பெண் விசாரணையில் இருந்து விலகல்