Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது ஏன்? ஆணையர் விளக்கம்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (11:05 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இருப்பதாகவோ அல்லது இருப்பதாக சந்தேகிப்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவோ அறியப்படும் நபர்கள் மற்றும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்படும் வீடுகளில் தமிழக அரசின் சார்பில் ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் கொரோனா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”கமல்ஹாசனிடம் பணி புரியும் ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்ததால் அவரது வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் வசிப்பதில்லை என்பது தெரியாததால் அங்கு ஒட்டப்பட்டுள்ளது. பிறகு நீக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற சிறிய தவறுகள் மீண்டும் நடக்காமல் கவனமாக கையாளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments