ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்று ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் ராம்குமாரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தி முடித்ததில், ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
அதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் ராம்குமார் மற்றும் சுவாதியின் நண்பராக கூறப்படும் பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தேசியகொடியை எரித்து சர்ச்சையில் சிக்கிய மகேந்திரன் திலீபன் என்பவர், ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் மூலம் ராம்குமாரின் முகநூல் பக்கத்தின் பாஸ்வர்டை பெற்றதாக கூறப்படுகிறது.
சுவாதி கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உள்ளடக்கி இந்த வீடியோ உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.