Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுத்தது யார்? அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (17:57 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தமிழகத்தில் உள்ளவர்கள் யாராவது சந்திக்க வேண்டும் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் மூலம் தான் அப்பாயின்மெண்ட் வாங்க முடியும். அதுதான் இதுவரை நடைமுறையாக இருந்து வருகிறது.
 
ஆனால் இன்று நடிகர் கமல்ஹாசன், ராகுல்காந்தியை சந்தித்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது. அவருக்கு யார் ராகுல்காந்தியை சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கி தந்தார்கள் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் திரையுலகின் முக்கிய புள்ளி ஒருவர் மூலம் ராகுல் காந்தியை சந்திக்க கமல் அப்பாயிமெண்ட் வாங்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பை அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கமல் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒருவேளை பின்னாளில் கூட்டணி வைத்தாலும் கமல், நேரடியாக ராகுல்காந்தியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments